சொன்னபடி உயிர்த்தெழுந்தார்;
சொன்னதைச் செய்து முடித்தார்:
என் முடிவான வாழ்வுதனை;
முடிவில்லாமல் செய்தாரே.
சொன்னபடி உயிர்த்தெழுந்தார்;
சொர்க்கத்திற்கு வழி வகுத்தார்:
எனக்காகச் சோதனையைத் தாம் பொறுத்து;
சிலுவையிலே தொங்கினாரே.
சொன்னபடி உயிர்த்தெழுந்தார்;
சொல்லொணா துயர் பொறுத்தார்:
தம் விலையற்ற உதிரம் சிந்தி;
என் விலையைச் செலுத்தினாரே.
சொன்னபடி உயிர்த்தெழுந்தார்;
என் பொறையைச் சுமந்துவிட்டார்:
பொறுப்பற்று வாழ்ந்த என்னைத்;
தம் பொற்பாதம் சேர்த்தாரே.
சொன்னபடி உயிர்த்தெழுந்தார்;
ஒரு சொல்லால் (எனக்கு)உயிர் தந்தார்:
ஆயிரம் நாவுகள் எனக்கு இருந்தாலும்,
என் இயேசுவைத் துதிக்க அவை போதாதே.
மனுவேல்
April
20, 2014 - Easter Sunday
