Labels

Friday, September 6, 2013

எம் வீட்டு வாழை மரம்


எம் வீட்டு வாழை மரம்


மாசி முதல் ஆவணி வரை ஆண்டவரின் ஆசீர்வாதம்,
இங்கு குறைவின்றிப் பொழிந்தது மெய்யான கூற்றன்றோ;
நல்லார் ஒரு சிலர் இவ்வுலகினிலே இருப்பதினால்
அவர் பொருட்டுத் தவராமல் மும்மாரி பொழிந்ததன்றோ.


ராசி என்று, எம் கைராசி என்று சொல்ல வேண்டாம்;
மழை மட்டும் போதாது, சில துளி வேர்வையும் வேண்டுமன்றோ;
வளம் பெற்ற மண் இருக்க, கண் மூடா மகிபன் 
                                                                                    என்றும் உடன் இருக்க,
                                                                        பாகை முதல் வாழை வரை சிறப்பாகச் செழித்ததன்றோ.


உயரத்தைக் கணக்கிட உதவினாள் மனோ என்ற மகராசி;
பட்டாசு போல் வெடித்திடும் மனோவின் பூர்வீகம் சிவகாசி:
சிறப்பாக வளர்ந்துள்ள எம் வீட்டு வாழைமரம்;
வீதியில் செல்வோரின் சிரம் திரும்பச் செய்ததன்றோ.


வாழ்வாங்கு வாழ நம் நாட்டில் வாழையைக் குறிப்பிடுவதேன்?
ஒரு வேர் பல மடங்காய்ப் பெருகி இடமடைத்து வளருமாப்போல்;
ஆண்டவரின் ஆசீர்வாதம் அபரிமிதமாய் பொழிந்து விட்டால்,
அதை அணைபோட்டு அடைத்துவைக்க எவராலும் கூடாதன்றோ.


வேண்டுதலுக்கு விடையளிக்கும் வேந்தனிடம் வேண்டுகின்றேன்;
துரிதமாய்ச் செய்திடுவார்;  உறங்காமல், துயிலாமல் துணை நிற்பார்:
வரப்போகும் பேத்தியையும், பேரனையும், அவர்களின் பெற்றோரையும்,

உங்களையும் அவர் ஆசீர்வதிப்பது நித்திய நிச்சயமன்றோ.

நீங்கள் வாழை போல் வாழ்க!!  இயேசுவின் நாமம் என்றென்றும் வாழ்க!

அன்புடன்
மனுவேல்

No comments:

Post a Comment