காக்கைகளை கவனித்துப்
பாருங்க
அவை விதைக்கிறதும்
இல்லை
அவை அறுக்கிறதும்
இல்லை
பரம பிதா
போஷிக்கிறார்!
எங்களை பரம
பிதா போஷிக்கிறார்!!
காக்கைகளை கவனித்துப் பாருங்க
ஆகாயத்துப் பறவைகளைப்
போஷிக்கும் தேவன்
உன்னையும் என்னையும்
நடத்திடுவார் - (2)
கலங்காதே நீ கலங்காதே - (2)
உனக்காக யாவையும் செய்திடுவார்.
உனக்காக யாவையும் செய்திடுவார்.
காக்கைகளை கவனித்துப் பாருங்க
எதைக் குறித்தும்
மகனே நீ கவலைப்படாதே
யேசப்பா எல்லாவற்றையும்
பார்த்துக் கொள்வார்
- (2)
நீதிமானின் சந்ததி
என்றும்
அப்பத்திற்காக அலைந்து
திரிவதேயில்லை
நீதிமானின் சந்ததி
என்றும்
உதவிக்காக ஏங்கித்
திரிவதே இல்லை
நீதிமானின் சந்ததி
என்றும் - (2)
ஒரு நாளும்
வெட்கப்பட்டுப் போனதே
இல்லை.
காக்கைகளை கவனித்துப் பாருங்க
பறவைகளைக் காட்டிலும்
நீ விஷேஷமானவன்
பரலோக பொக்கிஷத்தை
உனக்குத் தருவார்
பயப்படாதே பயப்படாதே
- (4)
எலியாவைப் போஷித்தவர்
உன்னையும் போஷிப்பார்
யோசேப்பை நடத்தினவர்,
உன்னையும் நடத்துவார்.
காக்கைகளை கவனித்துப்
பாருங்க
Photo Courtesy~Andrew
No comments:
Post a Comment